Friday, July 17, 2009

எப்பொழுது தெரிந்துகொள்வாய் ????

உனக்கு தெரியாது !!!
நீ ஊட்டி விட வேண்டுமென்று
என் கை விரலுக்கு நானே தண்டனை
குடுத்து நாட்கள்.

உனக்கு தெரியாது !!!
உன் மடியில் தலை சாய்பதர்க்காகவே
என் தலையணையை ஒழித்து வைத்த
நாட்கள்.

உனக்கு தெரியாது !!!
உன்னோடு உணவருந்த வேண்டி
நீ வரும் வரை என் பசியை
காகச் செய்த நாட்கள்.

உனக்கு தெரியாது !!!
உன் கைகோர்த்து நடக்கவேண்டியே
கலைத்து போல் நடித்த நாட்கள்.

உனக்கு தெரியாது !!!
உன் விடியல் ஒவ்வொன்றும்
என் முகத்தில் இருக்கவேண்டி
நீ விழிக்கும் வரை உன் அருகே அமர்ந்து
மெதுவாய் மூச்சு விட்ட நாட்கள்.

கடைசி வரை
எனக்கும் தெரியவில்லை...
இதையெல்லாம் உனக்கு எப்படி தெரியவைப்பதென்று !!!

No comments:

Post a Comment