உன் கையோடு கை சேர்த்து
வானில் மிதக்கும் நிலவை ரசித்தவாறு
காலாற நடைப்போட ஆசை !!!
உன் மடி மீது தலை சாய்த்து 
வானில் மிதக்கும் நட்சத்திரங்களை 
விரல் விட்டு எண்ண ஆசை !!! 
உன் தோலோடு தோல் சேர்த்து 
மனிகனக்காய் மனம் திறந்து
பேச ஆசை !!
உன் விரல்களோடு
என் விரல்கள் கோர்த்து
அழுத்தமான என் அன்பை
உனக்கு உணர்த்த ஆசை !!!
உன் நெஞ்சிற்குள் என் முகம் புதைத்து
உலகம் மறந்து சில நொடியேனும்
உறங்கிட ஆசை !!! 
என்று நிறைவேறும் இந்த ஆசைகள் ???
காத்திருக்கக் காத்திருக்க
இதயம் கனக்கிறது....
கணம் இறக்க வருவாயா நீ??? 
No comments:
Post a Comment