என் தோளில் தலை சாய்க்க
நீ வந்தால் - ஒரு தோழியாய்
உன் தலை கோத நான் இருப்பேன் !!
என் மடியில் கண்ணயர
நீ வந்தால் - ஒரு அன்னையை
உன் நெற்றியில் முத்தமிட
நான் இருப்பேன் !!!
என் விரலோடு விரல் கோர்க்க
நீ வந்தால் - ஒரு காதலியாய்
நல்லன்பை பரிமாற்ற
நான் இருப்பேன் !!!
ஆயிரும் உறவுகள் இருப்பின்
உனக்கு அந்த ஆயிரமுமாய் நானே இருந்திட
நீ விரும்பும்பட்சத்தில் ...
No comments:
Post a Comment