ஏதோ ஒரு மூலையில் நீ,
எங்கேயோ நானும்,
உறவுகளுக்கும் தொடர்புகளுக்கும்
அப்பாற்ப்பட்ட நிலையில் -
ஆணென்றும் பெண்ணென்றும்
பேதங்கள் பாராமல் - நட்பை மட்டுமே
மனதில் சுமந்து சுற்றி வந்த காலம் அது!
எத்தனையோ சந்தோஷங்கள், எத்தனையோ சண்டைகள்,
அனைத்தையும் ரசித்து அனுபவித்து ஒன்றாய் திரிந்த அந்த அழகிய நாட்கள் !
எதையும் மறக்க வில்லை நான்; மறந்திருக்க மாட்டாய் நீயும்;
அன்று,
எங்கே ஊர் சுற்றலாம் என்று முடிவு செய்வதற்காகவே - தனியே
ஓர் நாள் ஊர் சுற்றியதுண்டு.
ஆனால் இன்றோ,
நம் நட்பை பற்றி நினைத்து நெகிழவே நாட்குறிப்பில் தனியோர் நேரம்
வகுக்கும் நிலையில் நான்.
என் இனிய நண்பனே, காலங்கள் நம்மை பிரித்தாளும்
நம் நட்பு நம்மை என்றும் இணைத்திருக்கும்.
என்றென்றும் நட்புடன்,
Charushan.
Dedicating to all my lovable friends!
No comments:
Post a Comment