Monday, June 15, 2009

விழித்திரு இளைஞனே...

நாளைய பாரதம் இளைஞன் கையில்...

அதற்காக இன்று நீ உறங்கலாமா???

இன்றைய பாரதத்தை நீ கட்டி காத்தால் தானே...

நாளைய பாரதத்தை நீ வெற்றி நடை போடச் செய்ய முடியும்...

ஊழல்கள் பல உன் கண் முன்னே நிகழ...

நான் என்ன செய்ய முடியும் என்றிருகலாமா நீ...

உன் சாமர்த்தியத்தை பயன்படுத்தி சாதுர்யமாய் செயல்படு

இந்தியாவை நொடி பொழுதில் மாற்றலாம்...

இழைஞனே நீ நினைத்தால்...

சந்திர மண்டலத்தை சுற்றி வலம் வர வேண்டிய நீ...

சந்திரனை பெண்ணோடு ஒப்பிட்டு வர்ணித்துகொண்டே, பொழுதை கழிக்கலாமா!!!

சாதனை உலகில் சரித்திரம் படைக்க வேண்டியவன் நீ...

இன்னும் சலனம் கொண்டு மூலையில் முடங்கலமா...

என் தேச இழைஞனே, உலகில் இனியனே..

இன்னும் ஏன் பாலுறக்கம்...

புறப்பட்டு!! எழுந்து நட!!!

சாதனைகள் உன்னை பின் தொடரும்!!!

No comments:

Post a Comment