ஈன்றெடுத்த நாள் முதல்
அளவில்லா
பாசத்தை அள்ளி தந்தவள் நீ!
என்னோடு சேர்ந்து நீயும் வளர்ந்தாய்
ஆனால் இன்றும் உன்னில் ஓர்
பச்சிளம் குழந்தை உண்டு - ஆம்
என்னை மட்டுமே சுமந்து வாழும்
உன் மனம்!
உனக்காக நீ வாழ்ந்த நாள் ஏதுமில்லை
என்னை நினைக்காமல் நீ வாழ்ந்த நாளுமில்லை
பெரிதாய் உனக்காக ஏதும் நான் செய்ததில்லை
அதை எதிர்பார்த்து நீயும் என்னை வழக்கவில்லை !!!
சிறு வயது முதலே
தந்தை பாசத்தை அறியாதவள் நான் - ஆனால் அந்த குறை தெரியாமல்
என்னை வளர்த்தவள் நீ
எனவே என்றென்றும் உன் பாசத்திற்கு நான் அடிமை !!!
நீ எனக்காய் தந்த அனைத்திற்கும்
என்றென்றும் அன்புடனும் நன்றிகளுடனும்
உன் செல்ல மகள் !!!
உனக்காக நான் எழுதிய அணைத்து வரிகளும்
உன்னிடம் பொக்கிஷமாய் உள்ளன - எனவே
இந்த வரிகள் என்னிடமே இருக்கட்டும் !!!
No comments:
Post a Comment