Tuesday, January 18, 2011

அம்மா....
ஈன்றெடுத்த நாள் முதல்
அளவில்லா
பாசத்தை அள்ளி தந்தவள் நீ!
என்னோடு சேர்ந்து நீயும் வளர்ந்தாய்
ஆனால் இன்றும் உன்னில் ஓர்
பச்சிளம் குழந்தை உண்டு - ஆம்
என்னை மட்டுமே சுமந்து வாழும்
உன் மனம்!

உனக்காக நீ வாழ்ந்த நாள் ஏதுமில்லை
என்னை நினைக்காமல் நீ வாழ்ந்த நாளுமில்லை
பெரிதாய் உனக்காக ஏதும் நான் செய்ததில்லை
அதை எதிர்பார்த்து நீயும் என்னை வழக்கவில்லை !!!
சிறு வயது முதலே
தந்தை பாசத்தை அறியாதவள் நான் - ஆனால் அந்த குறை தெரியாமல்
என்னை வளர்த்தவள் நீ
எனவே என்றென்றும் உன் பாசத்திற்கு நான் அடிமை !!!

நீ எனக்காய் தந்த அனைத்திற்கும்
என்றென்றும் அன்புடனும் நன்றிகளுடனும்
உன் செல்ல மகள் !!!

உனக்காக நான் எழுதிய அணைத்து வரிகளும்
உன்னிடம் பொக்கிஷமாய் உள்ளன - எனவே
இந்த வரிகள் என்னிடமே இருக்கட்டும் !!!

Monday, January 17, 2011

முத்தான மூன்று நாட்கள்
மகிழ்ச்சியை மட்டுமே உன்ற மூன்று நாட்கள்
இரவுகள் இனிமையாயின - உன்
அணைப்பில் இருந்த அந்த நிமிடங்களில்
மனம் தவித்தது - விடியலின்
வருகை தாமதிக்காத என
அந்த நிமிடத்து மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்காமல் - நாளைய
தனிமையை நினைத்து பயந்தது மனது
ஏனெனில்,
வெறும் சிற்பமாய் இருக்கும் நான் - சிறிது
கவலை மறப்பதும் மகிழ்வதும் உன்னோடே
நீ உடன் இல்லாத நொடிகளில் - மனம் கனக்கிறது
தனிமையின் தாக்கத்தால்
அந்த நொடிகளில் எனக்கான உற்சாகம்
நம் மழலையின் சிரிப்பே !!!
ஒரு கனவுக்கான இலக்கியம் நீ ; உண்மை அன்பிற்கான
அகராதியும் நீயே
என்னை சுயநலவாதி ஆகியவன் நீ,
பகிர்ந்து கொள்ள முடிய பாசம் உன்னுடையது -
நீ எனக்கு கட்டியது தாலி மட்டுமல்ல,
கடிவாளமும் தான் - உன்னை தாண்டி எதையும்
பார்கவோ சிந்திக்கவோ மற(ரு)க்கிறதே என் மனம் !!!

Wednesday, January 5, 2011

தனித்த இரவுகள்

தனித்து விடப்பட்ட இந்த இரவுகள்,
எனக்கு உணர்த்தியது -
உன் பிரிவின் வழியை மட்டுமல்ல,
என் வாழ்கையின் எதற்தங்களையும் தான் !