கூடல் மட்டுமல்ல - ஊடலும்
அன்பின் வெளிபாடே !
பெருமையோடு சொல்கிறேன் -
ஆயிரம் போராட்டங்கள் வரினும் உன்னை நேசிக்க
என்னை விட யாராலும்
முடியாது !
நேசிக்க மட்டுமல்ல - சுவாசிக்கிறேன்
உனையே தான் !
உன் முழு அன்பையும் நாடியே
என் போராட்டங்கள் அனைத்தும் !
கொஞ்சமேனும் மிச்சமின்றி
முழுதாய் உன் அன்பை பெறவே !
உன் கோபம் எனை சுடுகிறது
உன் வெறுப்பையே பரிசாய் தருகிறது !
இதற்கா போராடினோம்
என்று இறுதியில்
மனம் வழிக்கிறது !
எங்கு முடியுமோ ? என்று முடியுமோ ??
இந்த போராட்டங்கள் !
No comments:
Post a Comment